Skip to main content

 6 எம்.பி.களை ஜெயிக்க வைத்த டெல்டா மக்களுக்கு நன்றி சொல்லும் ஸ்டாலின் ! 

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

 

மாவட்ட திமுக சார்பில் திருச்சியில் நன்றி தெரிவிக்கும் பொதுகூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த எம்.பி. தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்றனர். அது போல 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 சட்டமன்றத்தில் வெற்றிபெற்று உள்ளனர். இதன் பிறகு நன்றி அறிவிப்பு கூட்டம் மண்டலம் வாரியாக நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது. 

 

k

 

இதன் முதல்கட்டமாக சென்னையில் கலைஞர் பிறந்தநாள் அன்று நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று திருச்சி உழவர் சந்தையில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்த கொள்வதற்காக திருச்சி வந்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். 


 இந்த கூட்டத்திற்கு வருகை தரும் திமுக தலைவர் ஸ்டாலினை கே.என்.நேரு தலைமையில் வரவேற்றார்கள். மாலை நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தஞ்சை பழனிமாணிக்கம், கரூர் ஜோதிமணி, நாகப்பட்டினம் செல்வராஜ், மயிலாடுதுறை ராமலிங்கம், பெரம்பலூர் ஐஜேகே பாரிவேந்தர், இவர்களோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திருவாரூர் பூண்டிகலைவாணன், அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தஞ்சை நீலமேகம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அவர்களை வெற்றிபெற வைத்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமாக திருச்சி உழவர் சந்தையில் இன்று மாலை மிகப்பிரமாண்டமாக நடைபெறுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“திமுக ஆட்சிக் காலத்தில்தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Minister K.N. Nehru says All projects have been completed during DMK regime

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து லால்குடியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி செய்யும் காலத்தில் தான் தமிழகத்தில் எந்த திட்டங்கள் வந்தாலும் லால்குடி தொகுதிக்கு நிறைவேற்றப்படும். கொள்ளிடம் பாலம், விவசாய கல்லூரியில் கலைக் கல்லூரி, மகளிருக்கான ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் கல்லூரி என பல்வேறு அடிப்படை தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற வளாகம், நகராட்சி அலுவலகம்,  பேரூராட்சி அலுவலகம், திருச்சி - சென்னை சாலை மற்றும் சிதம்பரம் சாலையை இணைக்கும் வகையில்புதிய இணைப்புச் சாலைகள் நடைபெற அதற்கான ஆயத்த பணியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதுபோல புதிய பல்வேறு திட்டங்கள் லால்குடி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட உள்ளன. அ.தி.மு.க ஆட்சியில் பத்தாண்டுகளில் லால்குடி சட்டமன்றத் தொகுதியை அ.தி.மு.க புறக்கணித்து எந்த திட்டமும் நிறைவேற்றப்படாமல் புறக்கணித்து வந்தன. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்பொழுதெல்லாம் ஆட்சி செய்கிறதோ அப்பொழுதெல்லாம் லால்குடியில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றி பேசினார். அதனைத் தொடர்ந்து மணக்கால், ஆங்கரை, திருமங்கலம், வாளாடி புது ரோடு, புதுக்குடி, சிறு மருதூர், மகிழம்பாடி, நெய் குப்பை, புதூர் உத்தமனூர், தச்சங்குறிச்சி பல்லபுரம், பூவாளூர் பேரூர் கழகம் உட்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தனர்.

வாக்கு சேகரிக்கும் போது மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, லால்குடி நகர் மன்ற தலைவர் துணைமாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன்,  மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் குரு அன்பு செல்வன், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் சுபாஷ்ராமன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story

“மோடி தேர்தல் முடிந்த பின்பு நம்மை எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்” - அமைச்சர் கே.என். நேரு

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Minister K.N. Nehru says Modi won't even look at us after the election

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நெம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார் கோயில், மண்ணச்சநல்லூர், கூத்தூர், சமயபுரம் எஸ்.புதூர், இருங்களூர் ஆகிய பகுதியில் திமுக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் கே.என். நேரு, “மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நெம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார் கோயில் உள்ளிட்ட பகுதிகள் விரைவில் திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளது. இப்பகுதி ஒரு வளர்ச்சி பெறக்கூடிய பகுதி. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் மேலும் வளர்ச்சி பெறும். மேலும் இத்தொகுதி இடம்பெற்றுள்ள பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அருண் நேரு போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நமது முதல்வர் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் உதவி செய்யவில்லை. மாறாக உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகம் நிதி வழங்குகின்றனர். தேர்தல் வந்துவிட்டது என்பதால் பிரதமர் தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தல் முடிந்த பின்னர் நம்மை எட்டிக்கூட பார்க்க மாட்டார். ஆதலால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்போதுதான் நாம் கைகாட்டும் பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். ஆதலால் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அருண் நேருவை வெற்றி பெற செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வேட்பாளர் அருண் நேரு, “நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நமது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டது போல நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடக்கும் போர். இது ஒரு ஜனநாயக போர் என்று கூட சொல்லலாம். ஆதலால் இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

பிரச்சாரத்தின் போது ஒன்றிய கவுன்சிலர் அம்பிகாபதி, மதிமுக மாவட்ட செயலாளர் டி. டி.சி.சேரன், திருச்சி வடக்கு புகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.பி.எஸ்.செந்தில், ஒன்றிய செயலாளர் நீலமேகம் செந்தில், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் சுபாúஷ்ராமன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்