Skip to main content

சாலையோர மக்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் உணவளித்த டிரான்ஸ் கம்யுனிட்டி கிச்சன்..! (படங்கள்)

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கரோனாவின் இரண்டாம் அலையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கையும், கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசியையும் தமிழக அரசு பெரும் துணையாக கொண்டு செயல்பட்டுவருகிறது.  

 

முழு ஊரடங்கால், தெருவோரம் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்துவருகின்றனர். அவர்களுக்குத் தினமும், ஏதோ ஓர் தொண்டு நிறுவனமோ, தொண்டு மனம்கொண்ட தனி நபரோ தங்களால் முடிந்த ஒருவேளை உணவையாவது கொடுத்துவருகிறார்கள். ஒருசிலர் இதனை தினமும் செய்துவருகின்றனர். இந்நிலையில், டிரான்ஸ் கம்யுனிட்டி கிச்சன் (Trans community kitchen) என்ற அமைப்பு சார்பில் சாலையோரம் வசிக்கும் மக்கள், ஆதரவற்றோர்களுக்குத் தினமும் இலவச உணவு வழங்கிவருகிறார்கள். இன்று (28.05.2021) சௌமியா என்ற திருநங்கை, கரோனா பாதுகாப்பு கவச உடையணிந்து வந்து, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருந்தவர்களுக்கு உணவளித்தார். அங்கிருந்தவர்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி சாப்பிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்