
தமிழகத்தில் 6,986 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 62,305 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் 6,986 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 2,13,723 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது வரை மொத்தம் 53,703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 5,471 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,56,526 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிற்கு குணமடைதோர் விகிதம் 73.23 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 1,155 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 23-வது நாளாக சென்னையில் இரண்டாயிரத்துக்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் மொத்த பாதிப்பு என்பது 94,695 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 49 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 36 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக கரோனா உயிரிழப்பு 3,494 ஆக அதிகரித்துள்ளது. 57 ஆவது நாளாக தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு பதிவாகி வருகிறது. சென்னையில் மட்டும் கரோனாவால் இதுவரை 2,011 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 127 பேரும், திருவள்ளூரில் 208 பேரும், காஞ்சிபுரம் 89, மதுரை 210, ராமநாதபுரம் 57, திருச்சி 58 என இதுவரை மொத்தமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல் சென்னை அல்லாது பிற மாவட்டங்களில் இதுவரை கரோனாவால் 1,483 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிற மாவட்டங்களில் நான்காவது நாளாக கரோனா ஐயாயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 5,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற மாவட்டங்களில் 4 நாட்களாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா பதிவாகி வருகிறது. விருதுநகரில் மேலும் 385 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 501, காஞ்சிபுரம் 363, திருவள்ளூர் 450, ராணிப்பேட்டை 36,7 கோவை 220, மதுரை 209, நெல்லை 186, சேலம் 162, தர்மபுரி 131 கடலூர் 165, புதுக்கோட்டை 113, திருவாரூர் 93, கள்ளக்குறிச்சி 125 என கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.