Skip to main content

ஸ்டெர்லைட்க்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கம் போராட்டம்!

Published on 13/04/2018 | Edited on 13/04/2018
sterlite-plant-c


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என கூறி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி அ.குமரெட்டியாபுரத்தில் பொதுமக்கள் 61-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி உள்ளிட்ட 12 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, காமராஜ் கல்லூரி, கோரம்பள்ளம் அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து அந்தந்த கல்லூரிகள் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என கோஷம் எழுப்பினார்கள்.

இதையடுத்து மாணவர்கள் அங்குள்ள வி.வி.டி சிக்னல் பகுதியில் இருந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட திட்டமிட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்ப‌ட்டனர். போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து இருந்தனர். தடுப்புகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்