Skip to main content

பறையர் மண்டபம் இடிப்பு - அதிகாரிகளை மிரட்டிய அடாவடி சாமியார்

Published on 22/11/2018 | Edited on 22/11/2018
k

 
தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள கோயில்களை வருவாய்த்துறையினர் இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். அதன்படி கிரிவலப் பாதையில் சில கோயில்கள் இடிபட்டுள்ளன. கிரிவலப்பாதையில் அருள்மணி என்கிற தனிநபர் கோயில் கட்டி நடத்துகிறார். இந்த கோயிலுக்கு பாண்டிச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமி உட்பட பல தென்னிந்திய அமைச்சர்கள் வந்துள்ளனர். இவர் கோயில் அருகில் வருவாய்த்துறை இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளார்.


அந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியபோது, நான் யார் தெரியுமா?, என் அரசியல் செல்வாக்கு தெரியுமா, உங்களை நான் ஒழிச்சிடுவன், நான் போன் பண்ணா எவ்வளவு பெரிய ஆளாயிருந்தாலும் இங்க வந்து நிற்பாங்க பாக்கறிங்களா என மிரட்டினார். அதுப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளினர். அதோடு, பணி செய்த அதிகாரிகளை மிரட்டிய அருள்மணி மீது வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் போலீசில் புகார் தந்துள்ளார்.

 

lo


அதேப்போல் நகரில் அப்படியொரு கோயில் இடிக்கப்பட அது சாதி சர்ச்சையாகியுள்ளது.


திருவண்ணாமலை நகரில் செங்கம் சாலையில் சண்முகா மேல்நிலைப்பள்ளிக்கு அருகே பறையர் குளம் என்கிற குளம் உள்ளது. இந்த குளத்துக்கு எதிரே மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை கடந்த 20 ந்தேதி விடியற்காலை 2.30 மணிக்கு அதிகாரிகள் ஜே.சி.பி கொண்டு வந்து இடித்து இரவோடு இரவாக அந்த மண்ணை வாரிவிட்டனர்.

 

ko


இதனை பார்த்து அதிர்ச்சியான இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினர் நவம்பர் 21ந்தேதி காலை சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் வந்து சமாதானம் செய்தனர். 

 

இந்த மண்டபம் ஆயிரம் காலத்துக்கு முற்பட்டது. இந்த மண்டபம் இடிப்பது தொடர்பாக எந்த தகவலும் சொல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாககூறி இடித்துள்ளது அதிர்ச்சியை தருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதை சரிச்செய்ய பல வழிகள் உள்ளன. அவைகளை செய்வதை விட்டுவிட்டு இடித்திருப்பது என்ன நியாயம் ?. இதேப்போல் வேறு சாதி மண்டபமாக இருந்தால் அதிகாரிகள் இடித்திருப்பார்களா, அதிகாரிகளுக்கு அந்த தைரியம் வந்திருக்குமா என கேள்வி எழுப்புகின்றனர்.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் இப்படியொரு காரியத்தை செய்துள்ளது.   இதனை நாங்கள் சும்மா விடமாட்டோம் என்கிறார்கள் இந்து அமைப்பினர்.

 

சார்ந்த செய்திகள்