Skip to main content

தேனி விஷன்... அறிமுக விழாவில் ஓபி.ரவீந்திரநாத்குமார்!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

தேனியில் உள்ள அதிமுகவினர் சார்பாக பெரியகுளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் நகர்கழக உறுப்பினர்கான நன்றி அறிவிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை தாங்கினார். 

 

 Theni Vision ... Opening Ceremony

 

இந்த கூட்டத்தில் இறுதியாக பேசிய எம்.பி. ரவீந்திநாத்குமார், தமிழகத்தின் சார்பாக நான் ஒரே நபராக இருப்பதை என்னை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். அனைத்து மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகள் இருக்கும். தேனி மாவட்டத்தின் நீண்ட நாள் திட்டமான போடி மதுரை அகல இரயில் பாதை திட்டப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டிற்குள் இத்திட்டம் முழுமைபெறும். அதற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் முதல் லோயர்கேம்ப் வரை புதிய இரயில் பாதை திட்டம் குறித்து மத்திய இரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

 

 Theni Vision ... Opening Ceremony


அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற அலுவகத்திற்குள் நான் சென்றவுடன் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வணக்கம் வைத்தேன், அவர்களும் எனக்கு வணக்கம் வைத்துவிட்டு எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என கூறினார்கள். நான் அண்ணே உங்கள் வேலைய நீங்கள் பாருங்க நான் என் வேலைய நான் பார்க்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். 

தேனி பாராளுமன்ற தொகுதியை தமிழகத்தின் முதன்மையான தொகுதியாக மற்றுவதற்கான அனைத்து் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். ஆதற்காக ''விசன் தேனி'' தேனி பார்லிமெண்ட் கான்ஸ்டிடுயன்ட் டிவலப்மெண்ட் என்ற புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளேன். இந்த அமைப்பு மூலம் தேனி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்தப்படும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரைவில் துணை முதல்வர் இந்த திட்டத்தினை துவங்கி வைப்பார் என கூறினார். இக்கூட்டத்தில் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்