Skip to main content

"தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!!!"- மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அறிவிப்பு!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

tamilnadu matriculation director circular


தனியார் பள்ளிகளில் இணைய வழி வகுப்பு நடத்தக் கட்டணம் வசூலிக்கப் பெற்றோர்களை நிர்பந்தப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "பொதுமுடக்க காலத்தில் பள்ளி மாணவர்களிடம், 2019- 2020 ஆம் கல்வியாண்டிற்கான நிலுவைக் கட்டணம் மற்றும் 2020- 2021 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த பெற்றோர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது. 

ஒரு சில மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள் நடத்த கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்திப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. அரசாணையினை மீறி கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது, விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்