Skip to main content

தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

 

TAMILNADU CABINET MEETING DATE POSTPONED



தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் நவம்பர் மாதம் 2- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அந்த கூட்டம் நவம்பர்- 7 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும், அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும், முக்கிய முடிவுகள் எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் கூறுகின்றன.


 

சார்ந்த செய்திகள்

Next Story

யு.பி.எஸ்.சி. போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
UPSC Attention Candidates

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2024) யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனையடுத்து போட்டித் தேர்வர்கள் கடந்த 6 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான முதல்நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் இந்திய வனப் பணி தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுப் பணியாளர் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி மே 26 அன்று நடக்க இருந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Union Cabinet meeting chaired by Prime Minister Modi

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.

அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு சலுகைகள் அளிப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.