இந்திய சுதந்திர தினத்தின் (வைர விழா) 75ஆம் ஆண்டு கொண்டாட்டம் இந்தியா முழுவதும் இன்று (12.03.2021) துவங்கபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இன்று சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்கள் சுதந்திரத்திற்காக போராடிய காரணம், அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக துவங்கிய அறப்போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், உள்ளிட பல போராட்டங்களைப் பற்றிய குறிப்புகள் பதாகைகளாக இக்கொண்டாட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
திருச்சி முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி முதல் வேதாரண்யம் வரை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்யாகிரகத்தை நினைவு கூறும் வகையில் சுதந்திர போராட்ட நினைவு நடைபயணம் மற்றும் மிதிவண்டி பயணம் இன்று துவங்கியது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றியும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் வைரவிழா கொண்டாட்ட நிகழ்வில் கண்காட்சிக்காக பல்வேறு பதாகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.