சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட சாம்பார் இட்லியில் பல்லி கிடந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் ஆய்வில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் உள்ளது மீனாட்சி உணவகம். இந்த கடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்காக சாம்பார் இட்லி வாங்கி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த சாம்பார் இட்லியில் பல்லி கிடந்ததாக வாடிக்கையாளர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி இருந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டார். தொடர்ந்து கெட்டுப்போன கோழிக்கறி குழம்பு மற்றும் அழுகிப்போன காய்கறிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும் உணவகத்தை முறையாக சீர்படுத்த ஐந்து நாட்கள் கெடு அளித்ததோடு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் வைத்து விட்டுச் சென்றனர்.