Skip to main content

செயற்கைக்கோள் விடும் அதேகாலகட்டத்தில் குழந்தையை மீட்கப் போராடி வருவது தலைகுனிவு-சீமான்  

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.  அந்த கோரிக்கை அறிக்கையில்,

திருச்சி, மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித் எனும் 2 வயது குழந்தை விழுந்துள்ள செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

 

seeman report

 

விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நம் நாடு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற செய்திகேட்டு பெருமைப்படுகிற அதே காலக்கட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அதை மீட்கப் போராடி வருவது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இத்துயரங்கள் இனியும் தொடராது தடுக்க அரசு தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும் எனவும், ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்பாடுகள் முடிந்த பிறகு நிரந்தரமாக மூடியோ, பயன்பாடுகள் நிறைவுறாது இருப்பின் தற்காலிகமாக மூடியோ வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் எனவும், இனி இப்படியான கொடுமை நடக்க காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன் என கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்