திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை செவ்வாய்க்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் வழக்கமாக ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும்.
இந்நிலையில் அடுத்த வாரம் ஜூன் 17 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் சுமார் மூன்று கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை வர்த்தகம் நடைபெற்று இருக்கவேண்டும். ஆனால் ஒரு கோடிக்கு மட்டும் வர்த்தகம் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வியாபாரிகள் மத்தியில் பேசிய போது, ‘ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தாலும் வியாபாரம் நடைபெறாமல் வர்த்தகம் குறைந்துள்ளதற்கு காரணம், ஆடுகளின் வளர்ப்பு செலவினங்கள் அதிகமானதால் ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விற்பனை குறைந்துள்ளது. ஆடு வளர்ப்பாளர்களுக்கு நல்ல கணிசமான தொகை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்கள்.