கட்டுமான நிறுவனத்தினரை ரூபாய் 50 லட்சம் கேட்டு மிரட்டியதாக, கெவின் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரபல கட்டுமான நிறுவனமான ஜிஸ்கொயருக்கு எதிராக அவதூறு பரப்புவேன் என்று ரியல் எஸ்டேட் அதிபர் கெவின் மிரட்டியதாக, அவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், அவதூறு செய்தி வெளியிடாமல் இருப்பேன் என்று அவர் மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வார இதழ், யூ- டியூப் சேனல்கள், ட்விட்டர் மூலம் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கெவின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கோவிலம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அவரை கைது செய்தனர். அப்போது, அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் ஏர் பிஸ்டல் துப்பாக்கி, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட கெவின் 2ஜி வழக்கில் தொடர்புடையவரும், தற்கொலை செய்துக் கொண்டவருமான சாதிக் பாக்ஷாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.