Published on 03/11/2018 | Edited on 03/11/2018

விழுப்புரம், திருநாவலூர், தேனியில் உள்ள அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் மொத்தம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் உள்ள காவல் நிலையத்தில் நடப்பட்ட சோதனையில் 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 2.51 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தேனி பஞ்சாயத்து அலுவலகத்தில் 80,200 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளது.