![R. K. Selvamani](http://image.nakkheeran.in/cdn/farfuture/pZpmTY8twmRIYNIb6GHjFBdklKtrlF6mAIfldlIXPnY/1533347632/sites/default/files/inline-images/R.%20K.%20Selvamani%20600.jpg)
திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐபிஎல் போட்டி தினத்தன்று, காவிரி மேலாண்மை அமைக்க கோரி போராடிய திரை உலகினர் பாரதிராஜா தலைமையில் ஆர்பாட்டத்தை முன்னெடுத்தார்கள். போராட்டத்தின் தீவிரத்தை, நியாயத்தை ஒடுக்க எண்ணியவர்கள் திட்டமிட்டு அறப்போராட்டம் நடத்தியவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்கள். இயக்குநர்கள் மு.களஞ்சியம், வ.கௌதமன், வெற்றிமாறன் ஆகியோரும் திரைப்பட உதவி இயக்குநர்கள் பலரும் மிகக்கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இயக்குநர் மு.களஞ்சியத்தின் தோள் பட்டை எலும்பில் சிறு முறிவும், முதுகு தண்டுவடத்தின் அருகே ரத்தம் கட்டியும் காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றுமொரு தமிழ் வேளாண் ஆர்வலர் விளா எலும்புமுறிந்து நுரையீரல் சிகிச்சை பெற்றுவருகிறார்.
அறவழிப்போராட்டத்தின் போக்கை திசைத் திருப்ப முயன்ற சக்திகள் எதுவென அரசு கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். போராட்டக்காரர்களை காவல்துறையினர் அடித்ததால் தாக்குதல் நடந்ததா? காவல்துறையை போராட்டக்காரர்கள் அடித்ததால் வன்முறை நிகழ்ந்ததா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் அறவழிப்போராட்டத்தை ஜனநாயகப்பூர்வமாகவே அரசு எதிர்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.