பொதுமக்களிடம் யாருக்கு ஓட்டு போட்டீங்க என்று கேட்டால் கடைசி வரை யாருக்கு ஓட்டு போட்டோம் என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் நவீன காலத்தில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை ஓட்டு போடுவதை செல்பி எடுத்து போட்டது தான் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி கரூர் எம்.பி. தொகுதிக்குள் வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி நிற்கிறார். அதிமுக சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட 43 வேட்பாளர் போட்டியிடுகின்றார். மிகவும் விறுவிறுப்பான நிலையில் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கடுமையான உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பு போட்டியிருந்தனர். இந்த நிலையில் மணப்பாறையைச் சேர்ந்த ஒருவர் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு அதை தன் செல்போனில் அங்கு இருந்து செல்பி எடுத்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அங்கே உள்ள தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவே காட்டுகிறது. தேர்தல் ஆணையம் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இளைஞர் ஒருவர் தான் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது போட்டோ போட்டிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் என்னவோ தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் சவாலாகவே உள்ளது.