தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அணைத்து தரப்பு மக்களையும் உலுக்கிய சம்பவம் ஒன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது.அந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 12ம் தேதி பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், பாதிக்கப்பட்ட இளம் பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்த பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மிரட்டி வருவதாக தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில் அண்ணா பெல்டால அடிக்காதிங்க அண்ணா என்ற குரல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்பு இது சம்மந்தமாக அந்த இளைஞர்களிடம் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகிவற்றை பறிமுதல் செய்து விசாரித்த போது நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரின் மகன் ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் இந்த வழக்கை போலீசார் மூடி மறைக்க பல வகையில் சூழ்ச்சிகள் நடந்தன. ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளிகள் தொடர் போராட்டத்தால் இந்த வழக்கு கடந்த மார்ச் 12ம் தேதி இது தொடர்பாக இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது .சிபிசிஐடி போலீசார் 40 சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தயாரித்த அறிக்கையை சிபிஐயிடம் நேற்று ஒப்படைத்தனர். பின்னர் சிபிசிஐடி தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையின் விசாரணையில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றவாளிகள் மற்றும் 40 சாட்சிகளிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் 40 பேரும் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வழக்கின் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் மற்றும் வழக்கு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு தமிழ்நாடு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்களுக்கு எதிராக 40 பேர் அளித்த சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் வழக்கில் அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் நேற்று சிபிசிஐடி ஒப்படைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக முன்பை விட இப்பொழுது சாட்சியளிக்க மக்கள் தைரியமாக வருகின்றனர்.