மதுரையில் நடிகர் தனுஷ் தன் மகன் என்று உரிமைக்கோரி மேலூர் கதிரேசன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் நடிகர் தனுஷ் தரப்பில் பிறப்பு மற்றும் இருப்பிட சான்றிதழ்,கல்வி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் போலி எனக்கூறி மீண்டும் வழக்கு தொடுத்திருந்தார் கதிரேசன். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது கீழமை கோர்ட்டில் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூற கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் போலி சான்றிதல் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்பாக புதூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால் நீதிமன்றத்தின் இந்த கருத்தை செயல்படுத்தாமல் புதூர் போலீஸ் அதிகாரி கிடப்பில் போட்டதாகவும், கண்டுகொள்ளமல் விட்டதாகவும் கதிரேசன் மீண்டும் முறையிட இன்று நடந்த விசாரணையில் நடிகர் தனுசுக்கும், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி ஜேஎம் 6 நீதிபதி மாஜிஸ்திரெட் சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.