Published on 04/11/2023 | Edited on 04/11/2023
நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்படுகிறது.