Skip to main content

ஆடி கடைசி செவ்வாய்கிழமை...வேண்டுதலை நிறைவேற்ற அவ்வையாரம்மன் கோவிலில் குவிந்த பெண்கள்!

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் விசேசமும் பெண் பக்தா்களின் கூட்டமும் அலை மோதும். அதே போல் அந்த மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகளில் கோவில்களில் வழிபாடுகளும்  பெரும் விமர்சையாக இருக்கும்.

 

nagarkoil thalakkudi village aadi month festival


 
இதில் தமிழகத்தில் அவ்வையாரம்மனுக்கு உள்ள ஓரே கோவில் நாகா்கோவில் அருகே தாழக்குடியில் உள்ளது. இங்கு ஆடி மாதம் எல்லாம் செவ்வாய் கிழமைகளிலும் பெண்கள் பக்தா்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதில் கடைசி செவ்வாயன நேற்று கேரளா, குமாி மற்றும் நெல்லை மாவட்டங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அவ்வையாரம்மனுக்கு கொழுக்கட்டை அவிழ்த்து படையல் வைத்து வழிபட்டனா்.

 

nagarkoil thalakkudi village aadi month festival




இங்கு திருமணமாகாத இளம் பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கொழுக்கட்டை அவித்து படையல் வைத்து வழிப்பட்டால், அவா்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அதன்படி அவ்வையாரம்மன் கோவிலுக்கு வந்த பெண்கள் அங்கு  ஆற்றில் குளித்து அவ்வையாரம்மனை வழிபட்டனர்.


 

சார்ந்த செய்திகள்