Skip to main content

நிவாரணப்பணிகளுக்கு அமைச்சர்கள் நியமனம்!

Published on 03/11/2017 | Edited on 03/11/2017
நிவாரணப்பணிகளுக்கு அமைச்சர்கள் நியமனம்!

மழை கால நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.  இக்கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவில்,  வடகிழக்கு பருவமழை நிவாரணப்பணிகளைமேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 நிவாரணப் பணிகளுக்காக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கடலோர மாவட்டங்களில் 115 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னையின் 15 மண்டலங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.  மழை பாதித்த பகுதிகளில் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடன் தெளிக்கவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்