




Published on 24/12/2022 | Edited on 24/12/2022
தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு நாளையொட்டி மதிமுகவின் கழகப் பொதுச்செயலாளர் வைகோ மதிமுகவின் தலைமை நிலையமான தாயகத்தில் உள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கும், எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்.