மாஞ்சா நூல் காற்றாடி விற்றதாக, சென்னை அமைந்தகரையில் நேற்று மாலை ஒருவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், மறைமுகமாக மாஞ்சா நூல் விற்பனை தொடர்பான தகவல்களை திரட்டினர். அதன் அடிப்படையில், அமைந்தகரையில் ஒரு செருப்பு கடையில் 400-க்கும் மேற்பட்ட மாஞ்சா நூல் காற்றாடிகள் விற்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, கடை உரிமையாளர் தமிமுன் அன்சாரி என்பவரையும், ஷாஜகான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு கடையில் விற்பனைக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மாஞ்சா நூல் காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அண்மையில் சென்னையில் கொடுங்கையூரில் மாஞ்சா நூல் காத்தாடி அறுந்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு முன்பே சென்னை காவல் ஆணையர் 60 நாட்கள் மாஞ்சா நூல் விற்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.