Published on 30/04/2019 | Edited on 30/04/2019
லாட்டரி அதிபர் மார்ட்டினின் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் 22 இடங்கள், சென்னையில் 10 இடங்கள், கொல்கத்தாவில் 18 இடங்கள், மும்பையில் 5 இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத், கவுஹாத்தி, சிலிகுரி, கேங்டாக், ராஞ்சி ஆகிய நகரங்களிலும் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் துறையிலும் இருக்கும் மார்ட்டினிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்த மார்டினை வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.