Published on 16/12/2019 | Edited on 16/12/2019
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களை தவிர்த்து டிசம்பர் 27, 30-ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு இன்றுடன் கடைசி நாள் என்பதால், நேற்று வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இன்றும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடக்க உள்ளது என்பதும், வேட்புமனுவை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் டிசம்பர் 27ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.