Published on 31/08/2019 | Edited on 31/08/2019
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைந்துள்ளது. மத்திய அரசு தரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 24 சதவிகிதமாக இருப்பதால் தமிழகத்தில் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் ரேஷனில் மக்களுக்கு வழங்கப்படும் மண்ணெணெய் அளவு குறைக்கப்படும். ரேஷனில் எவ்வளவு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என குடும்ப அட்டைதாரர்களுக்கு விளம்பரப்படுத்துங்கள் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.