Published on 12/03/2018 | Edited on 12/03/2018

உடுமலைப்பேட்டை சங்கர் பெயரில் அறக்கட்டளை தொடங்கும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளைய சமுதாயதுதிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ‘சங்கர் சமூகநீதி அறக்கட்டளை’ தொடங்க உள்ளார் உடுமலையில் கவுரவ கொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கவுசல்யா.
கணவர் சங்கரின் நினைவு நாளையொட்டி உடுமலை குமாரலிங்கம் பேருந்து நிலையத்தில் விழா நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குட்டம் பகுதியில் விழா நடத்த அனுமதி வழங்க திருப்பூர் எஸ்.பி., மடத்துக்குளம் ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.