சென்னை மாநகராட்சியில், குப்பைகளை எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்பதை கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று (03-09-24) சென்னை வந்துள்ளார்.
சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்போடு செயல்பட்டு வரக்கூடிய பயோ - சிஎன்ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார். சென்னையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, கர்நாடகா மாநிலத்தில் செயல்படுத்த திட்டம் வகுக்குப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை நொதிக்க வைத்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. சேத்துப்பட்டு பகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அந்த மையம் மூலம் நாள்தோறும் 4,800 கிலோ சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு கிடைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்த இயற்கை எரிவாயுவை 14 கிலோ எடை அளவிற்கு, ஒரு நாளைக்கு 324 சிலிண்டர்கள் இந்த மையம் மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.