Skip to main content

24 மணிநேரத்தை கடந்து போராட்டம்-பக்கவாட்டில் குழிதோண்டி மீட்க 4 மணிநேரம் ஆகும்! 

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்துவரும் நிலையில் தற்போது ரோபோ போன்ற கை அமைப்பு கொண்ட நவீன கருவி உள்ளே செலுத்தப்பட்டு வருகிறது.

 

It takes 4 hours to restore the sidewalk pit!

 

சுஜித் தற்போது 85 அடிக்கு கீழ் சென்றுள்ளான் என்ற தகவலும் கிடைத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சியை தொடர்ந்து நெய்வேலியை சேர்ந்த என்எல்சி மற்றும் தனியார் அமைப்புகளை கொண்டு ஆழ்துளை கிணற்றுக்கு அருகே சுரங்கள் தோண்ட திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 24 மணிநேரத்தை கடந்து இந்த மீட்பு பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இந்த ஆழ்துளை கிணறுக்கு பக்கவாட்டில் 3 மீட்டர் தொலைவில் ஒரு மீட்டர் அகலத்தில் சுரங்கம் தோண்டி அதனுள் ஆக்சிஜனுடன் பயிற்சி பெற்ற வீரரை அனுப்பி குழந்தை சுஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த 90 அடி சுரங்கமானது தோண்டப்பட 4 மணிநேரம் ஆகும் என என்எல்சி சுரங்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்