இன்று போயாஸ்கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளீர் அணியுடனான பேச்சுவார்த்தை சந்திப்பு நடைபெற்றது. இதில் ரஜினி மக்கள் மன்றத்தின் மகளீர் அணி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
எந்தநாட்டில் பெண்களுக்கு அதிகம் முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அந்த நாடு கண்டிப்பாக வளர்ச்சி பாதையில் இருக்கும். எனவே ரஜினி மக்கள் மன்றத்திலும் சரி, நான் துவங்கவிருக்கும் கட்சியிலும் சரி பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். எங்களுக்குள் என்ன பேசினோம் என்ன பேச்சுவார்த்தை நடந்தது பற்றி வெளியே சொல்லமுடியாது.
கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆளுநர் முதல்வர் பதவிக்கு அழைத்ததும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்ததும் கேலிக்கூத்தானது. ஆனால் அதையும் தாண்டி நமது நீதிமன்ற தீர்ப்பினால் கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றிபெற்றிருப்பதாக நான் கருதுகிறேன்.
காவேரி தீர்ப்பை கண்டிப்பாக வரப்போகும் கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் அது அவர்களது கடமை. மெரினாவில் ஈழதமிழர்களுக்கான நினைவேந்தல் நடத்த போலீஸ் அனுமதி அளிக்காமல் இருப்பதில் ஏதோவொரு காரணம் இருக்கும். இல்லாமல் தடை விதிக்கமாட்டார்கள் என்று கூறினார்.
மேலும் ஆன்மீக அரசியல் என்றால் ரஜினியுடன் கூட்டணி வைப்பதில் சற்று யோசிப்பேன் என கமலஹாசன் கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு ''இன்னும் பார்ட்டியே ஆரம்பிக்கல அதுக்குள்ள கூட்டணியா'' என நகைச்சுவையாக பதிலளித்தார்.