Published on 26/12/2023 | Edited on 26/12/2023
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 14 அரசுத் துறை செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33 ஆயிரத்து 500 பள்ளிகளில் சுமார் 3 லட்சத்து 61 ஆயிரம் அடிப்படை வசதிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உட்கட்டமைப்பு, கற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மை தேவைகள் 4 விதமாகப் பிரிக்கப்பட்டு இந்த குழுவின் ஆய்வறிக்கை மூலம் அவை பூர்த்தி செய்யப்பட உள்ளன.