Skip to main content

'ஆம்ஸ்ட்ராங்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றினேன்'- பிரபல ரவுடியின் பகீர் வாக்குமூலம் 

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
'I was afraid of Armstrong and went round and round' - famous rowdy's confession

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் ரவுடிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் என பலர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டு அதில் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 28 பேர் இல்லாமல் மொத்தம் 30 பேர் மீது தற்பொழுது ஐயாயிரம் பக்கத்திற்கு மேல் உள்ள குற்றப்பத்திரிக்கையானது கடந்த அக்.3 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'I was afraid of Armstrong and went round and round' - famous rowdy's confession

குற்றப்பத்திரிக்கையின் சாராம்சமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A 1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரனும், A 2 குற்றவாளியாக சம்போ செந்திலும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி பொன்னை பாலு கொடுத்திருக்கும் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'சிறையில் உள்ள ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டேன். கொலை செய்வதற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தேன். ஆம்ஸ்ட்ராங்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றித் திரிந்தேன்' என பொன்னை பாலு வாக்குமூலம் கொடுத்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்