சென்னையில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். சென்னை சேப்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 5.12 கோடி ரூபாய் செலவில் 24 மணி நேரமும் செயல்படும் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையம் கட்டுப்பாட்டு அலுவலகம் தமிழக முதல்வரால் இன்று திறக்கப்பட்டது. அதன் பிறகு கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது 'கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற நாணய வெளியீட்டு விழா தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா என மத்திய அமைச்சர்கள் எல்.முருகன் கூறியுள்ளாரே' என்ற கேள்விக்கு, ''நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசின் விழா. அதை நடத்தியது மாநில அரசு'' என்றார்.
தொடர்ந்து 'அமைச்சரவையில் மாற்றம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே' என்ற கேள்விக்கு ''எனக்கு தகவல் வரவில்லையே' என பதிலளித்தார்.