தனது நிலத்தில் புதைக்கப்பட்ட உடன் பிறந்த அண்ணனின் உடலை 'எப்படி எனக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கலாம்' என ஆத்திரமடைந்த தம்பி 18 நாட்களுக்கு பிறகு அண்ணனின் உடலை தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் புதைத்த சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜெஸ்டஸ் என்பவர் சாலை விபத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி இறந்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெஸ்டஸ் உடல் அவரது தாய் தந்தை உடல்களை அடக்கம் செய்யப்பட்ட கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் அந்த கல்லறை தோட்ட நிலம் ஜெஸ்டஸின் தம்பி கிறிஸ்டோபர் பெயரில் இருந்தது. அண்ணன் உடலை தனது நிலத்தில் புதைக்க உடன்பாடு இல்லாத தம்பி கிறிஸ்டோபர், 18 நாட்களுக்கு பின் அண்ணன் ஜெஸ்டஸ் உடலை மீண்டும் தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்தார். இந்த காட்சிகள் வீடியோக்களாக வெளியான நிலையில் இது தொடர்பான கிறிஸ்டோபேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' என்ற கண்ணதாசனின் பாடல் வரியை மீண்டும் மெய்ப்பித்துள்ளது இந்த சம்பவம்!