Skip to main content

ஓட்டுநரின் அலட்சியம்; புளியமரத்தில் மோதிய அரசு பேருந்து

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Government bus accident near Tirupattur after hitting a tamarind tree

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து நாட்றம்பள்ளி நோக்கி அரசு பேருந்து 40 பயணிகளை ஏற்றிகொண்டு சென்றது. இந்தப் பேருந்தில் ஓட்டுனராக ஜீவா(48) என்பவரும் நடத்துநராக சௌந்தரராஜன்(50) என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பேருந்து கட்டேரி பகுதியில் சென்றபோது ஓட்டுநர் ஜீவா செல்போன் பேசிக்கொண்டு பேருந்து இயக்கி உள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்பியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் திவ்யஸ்ரீ, முருகம்மாள், திவ்யா, மச்சராணி மற்றும் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 13 பெண்களுக்கும் 4 ஆண்களுக்கும், இரண்டு வயது குழந்தை என மொத்தம் 18 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்