Published on 19/09/2019 | Edited on 19/09/2019
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லப்பாக்கத்தை சேர்ந்த சேதுராஜ் ஆகிய இருவரும் சமீபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3,00,000 நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த தீனா, சேதுராஜ் குடும்பங்களுக்கு முதல்வர் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.