Skip to main content

ஆங்கில வழி கல்வி! - பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
edu

 

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெரும் துவக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவங்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

கன்னியாகுமரியைச் சேர்ந்த தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் கனகராஜ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில்,   ‘’அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி வந்தபின் பயனடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிக்கரித்து வருகிறது.  அது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த அரசாணையை விரிவுபடுத்த வேண்டும். விரிவு படுத்தினால் குறைந்து வரும் மாணவர்களின் சேர்க்கை உயரும்.  கிராமப்புற மாணவர்களுக்கு கட்டணம் இல்லாத ஆங்கில வழி கல்வி கிடைக்கும்.  இதனால் பயன் பெரும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும். கிராமப் புற மாணவர்களின் கல்வியின் தரம் மேம்படும்.  மேலும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் இட மாற்ற பிரச்சனை விலகும்.

எனவே தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெரும் துவக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி துவங்க நடவடிக்கை எடுத்து,  அரசு உதவி பெரும் பள்ளிகளில் அரசு பள்ளியில்  ஆங்கில வழி கல்விக்கு வழங்கும் அனைத்து சலுகைகளை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம் , தாரணி அமர்வு முன் விசாரனைக்கு வந்த போது இது குறித்து பள்ளி கல்விதுறை செயலாளர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

சார்ந்த செய்திகள்