Skip to main content

சமூகவலைதளங்களால் திசைமாற்றி போகாதீர்கள்- மாணவர்களுக்கு எடப்பாடி வேண்டுகோள்

Published on 04/05/2018 | Edited on 04/05/2018

இன்று சென்னை கீழ்பாக்கத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரியின் 175-ஆண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

edapadi

 

அப்போது விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் தங்களின் நேரத்தை வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்களில்  விரையமாக்கக்கூடாது, வாட்ஸப், பேஸ்புக், சின்னத்திரை, பெரியத்திரை என எதிலும் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். 

 

தற்போது சமூக வலைதளங்களின் மூலம் தீய சக்திகள் உருவெடுத்து வருகின்றன. அவை உங்களின் கவனத்தை ஈர்க்கப் பார்க்கும். அவதூறு செய்திகளை நம்பாதீர்கள். அவை உங்களின் திசையை மாற்றும். எனவே சமூக வலைத்தளத்தை அறிவை வளர்த்துக்கொள்ள மட்டும் பயன்படுத்துங்கள் என கூறினார்.   

சார்ந்த செய்திகள்