தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியின்போது 17 தொழிலாளர்கள் நல வாரியங்களை உருவாக்கினார் அன்றைய முதல்வர் கலைஞர். இதன்மூலம், 50க்கும் மேற்பட்ட உடலுழைப்பு தொழில்களை செய்துவந்த உழைப்பாளிகள் பயன்பெற்றனர். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் இந்த நல வாரியங்கள் முடக்கப்பட்டன. இந்தநிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், நல வாரியங்கள் உயிர் பெறும் என தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். நல வாரியங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக பொன். குமாரை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மற்ற நல வாரியங்களின் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற திமுகவின் தோழமைக் கட்சிகள் முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன.