Skip to main content

சிதம்பரம் அருகே வெள்ள நீரில் வந்த முதலை

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Crocodile in flood waters near Chidambaram

 

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சிதம்பரம் சுற்றுவட்ட பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சில நீர் நிலைகளில், பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் ஆறு, குளம், ஏரிகளில் இருந்த முதலைகள் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டுள்ளன.

 

அப்படி வெள்ளநீரில் அடித்து வரப்பட்ட ஒரு முதலை, சிதம்பரம் நகரத்தை ஒட்டி ஓடும் கான்சாகிப் வாய்க்கால் வழியாக வந்துள்ளது. அது நற்கந்தன்குடி கிராமம் அருகே கான்சாகிப் வாய்க்கால் கரை மீது ஏறிப்படுத்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனைப் பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினார்கள். முதலை வயலுக்கு வரும் மனிதர்கள் மற்றும் கால்நடைகளை கடிப்பதற்கு முன் வனத்துறையினர் பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்