Skip to main content

என்எல்சியில் கன்வேயர் பெல்ட் எரிந்து விபத்து

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
 Conveyor belt fire accident at NLC

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் நிலக்கரியை மேலே கொண்டு வர பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தீயணைப்புதுறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள 2வது சுரங்கத்தில் பெரிய அளவிலான இயந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சாரம் தயாரிப்பதற்காக கன்வேயர் பெல்ட் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு நிலக்கரியை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் ஓட்டு தலை (drivehead) பகுதியில் நேற்று மாலை  திடீரெ தீப்பிடித்தது.

இதனால் கன்வேயர் பெல்ட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.  இந்த தீ விபத்தினால் 2 வது சுரங்கம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து என்எல்சி இந்தியா நிறுவன உயர் அதிகாரிகள் தீயணைப்பு த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்பு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை. கன்வேயர் பெல்ட் மற்றும் ஓட்டு தலை (drivehead) பகுதி உராய்வின் காரணமாகவோ அல்லது மின் கசிவு காரணமாகவோ தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் பயங்கர தீ விபத்து; பொதுமக்கள் பாதிப்பு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
fire in Delhi Public damage

டெல்லியில் உள்ள காஜிபூர் குப்பைக் கிடங்கில் நேற்று (21.04.2024) மாலை எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனால் தீயில் இருந்து தொடர்ந்து புகை கிளம்பி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பைக் கிடங்கில் இருந்து விஷவாயு உற்பத்தியாகியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், “எங்களுக்கு தொண்டையில் எரிச்சல், புகையால் இருமல் வந்தது. இந்த தீயால் மாசு ஏற்பட்டது. இதனால் அனைவரும் அவதிப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார். மேலும் இது குறித்து உள்ளூரில் ஒருவர் கூறும்போது, “இன்று கண்விழித்து பார்த்தபோது அந்த பகுதி தெளிவாக தெரியவில்லை. சரியாக மூச்சு விட முடியவில்லை. கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. வெப்பம் அதிகரிக்கும் போது தீ விபத்துகள் தொடரும். அரசு இந்த பிரச்சனையை தீர்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், “டெல்லி மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறையினரும் தொடர்ந்து  தீயை அணைக்கும் பணியில் பணியாற்றி வருகின்றனர். தீ விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா காஜிபூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story

கோவையில் பயங்கர தீ விபத்து!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Coimbatore Corporation Vellalur fire incident

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல லட்சக்கணக்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் நேற்று மாலை திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அதே சமயம் ஹிட்டாட்சி மற்றும் பொக்லைன் வாகனங்கள் மூலம் குப்பைகள் நகர்த்தப்பட்டும் மற்ற இடங்களுக்கும் தீ பரவாமலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரண்டு டிரோன்கள் மூலம் தீப்பற்றி எரியும் இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.