Skip to main content

தொடர் நீர்வரத்து; மீண்டும் நிரம்புமா மேட்டூர் அணை? 

Published on 25/10/2024 | Edited on 25/10/2024
Continuous Blow; Willa mattur dum pilla upagain?

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டே நாட்களில் 2.91 அடி உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடப்பாண்டிலேயே இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பி இருக்கும் நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் தமிழகத்தில் பல இடங்களிலும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் 10.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரையில் 8.3 சென்டிமீட்டர் மழையும், நெய்யூரில் 8.1 சென்டிமீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 7.1 சென்டிமீட்டர் மழையும், திருவாரூரில் 6.8 சென்டிமீட்டர் மழையும் நாகை மற்றும் திருச்சியில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

அதேநேரம் காவிரியில் திறந்துவிடப்படும் நீர்வரத்தால்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 31,575 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 68.67 டிஎம்சியாக உயர்ந்துள்ள நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 7,500 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.92 அடியாக உயர்ந்துள்ளது.

சார்ந்த செய்திகள்