Skip to main content

தொடர் நீர்வரத்து; 90-ஐ தொட்ட மேட்டூர் அணை

Published on 25/07/2024 | Edited on 25/07/2024
continuous flow; Mettur Dam which touched 90

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 'தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி (31.07.2024) வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்' எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதைக் கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இன்றைய (25/07/2024) நிலவரப்படி பிலிகுண்டுலுவிற்கு நீர்வரத்து 38,000 கன அடியாக சரிந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 89.31 அடியில் இருந்து 90.01 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 52.66 டிஎம்சி ஆக உள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 390 நாட்களுக்குப் பிறகு 90 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 33,040 கனஅடியில் இருந்து 28,856 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக உள்ளது.

சார்ந்த செய்திகள்