Skip to main content

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு திடீர் விடுமுறை!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடியை கண்டித்தும் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக, சென்னை பல்கலைக்கழகத்திற்கு நாளை (18.12.2019) முதல் டிசம்பர் 23- ஆம் தேதி வரை விடுமுறை என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி டிசம்பர் 24- ஆம் தேதி முதல் ஜனவரி 1- ஆம் தேதி வரை ஏற்கனவே விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 

citizenship amendment bill 2019 issues reflected madras university holidays announced

மேலும் பல்கலைக்கழகத்தில் நாளை (18.12.2019) முதல் (23.12.2019) வரை நடைபெறவிருந்த வகுப்புகள், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 1- ஆம் தேதி வரை கல்வியல் ரீதியான பணிகளுக்காக பல்கலைக்கழக வளாகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை விவரம் பற்றி மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

ஏற்கனவே மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு ஜனவரி 20- ஆம் தேதி வரை விடுமுறை என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்