Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குடமுழுக்கு கோலாகலம்!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ் பெற்றது. இது பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. அதுமட்டும் இல்லாமல் அனைத்து சிவதளங்களிலும் கருவறையில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சிவபெருமான் இங்க மட்டும் தான் உருவ தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார். இதனால் உலகத்தில் உள்ள சைவர்கள் அனைவரும் இந்த கோவிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது வந்து செல்வது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி புகழ் மிக்க நடராஜருக்கு மூலநாதராக உள்ள ஸ்ரீஆதிமூலநாதர் சன்னதி கோவிலின் ஈசான மூலையில் அமைந்துள்ளது.
 

இந்தக் கோவில் தோன்றிய கதை குறித்து சிலர் கூறுகையில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தில்லை மரங்கள் அடர்ந்த தில்லை வனமாக இருந்தது. இந்த தில்லை என்ற பெயர் நாளடைவில் மருவி சிதம்பரம் என்று மாறியுள்ளது. இப்போதும் சிலர் சிதம்பரத்தை தில்லை என்றே கூறுவார்கள். இப்படியுள்ள தில்லை வனத்தில் சுயம்புவாக ஜோதி ஸ்வரூபமாக ஸ்ரீஆதிமூலநாதர் எழுந்தருளினார் என கூறப்படுகிறது.

chidambaram nadarajar temple festival peoples

மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீவைகுண்டத்தில் திருப்பாற்கடலில் ஆயிரம் சிரசுடைய ஆதிசேஷன் ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தினமும் சுமந்து வர ஒருநாள் சாமி மிகவும் பாரமாய் இருப்பதை ஆதிசேஷன் உணர்ந்து அதற்கான காரணத்தை வினவ அப்போது ஸ்ரீ மகாவிஷ்ணு தான் தாருகா வனத்தில் மோகினியாய் அவதரித்து ஸ்ரீ நடராஜரின் ஆனந்த தாண்டவ காட்சியை கண் குளிர கண்டதை நினைத்து உடல் சிலிர்த்தமையால் பாரமாக உணர்ந்தாய் என்றார். அதற்கு ஆதிசேஷன் மகாவிஷ்ணுவை நோக்கி தங்களுக்கு ஆனந்தத்தை அருளிய அந்த ஆனந்த நடனக் காட்சியை தானும் காண வரம் கேட்க விஷ்ணுவும் வரம் அருளியுள்ளார்.  

 

இதனைதொடர்ந்து பூலோக கைலாயம் என்னும் தில்லை வனத்தில் அருளும் ஸ்ரீ மூலநாதரை பூஜைகள் செய்ய பணித்துள்ளார். ஆதிசேஷன் ஸ்ரீ பதஞ்சலி முனிவராய் அவதரித்து தில்லையின் மேற்கு திசையில் பகுதியில் ஸீஷம ரூபத்தில் பிலாத்வார  வழியாக ஸ்ரீ ஆனந்தி ஸ்வரர் கோயிலுக்கு வந்து ஸ்ரீ மூலநாத புலியின் பாதம் கொண்ட ஸ்ரீ வியாக்ரபாத முனிவர் உடன் ஆதிமூலநாதரை பக்தி சிரத்தையுடன் பலகாலம் பூஜித்து வர அகமகிழ்ந்த ஸ்ரீ மூலநாதர் அம் முனிவர்களிடம் என்ன வரம் வேண்டும் என வினவ முனிவர்கள் அம்பிகையோடு ஆடிடும் ஆனந்த தாண்டவ காட்சியை காண வரமாக கேட்டனர். அதன்படியே ஆனந்த நடராஜமூர்த்தி தை மாதம் பூசம் நட்சத்திரம், குருவாரம் பௌர்ணமி இணைந்த நன்னாளில் திருகைலாயத்திலிருந்து தில்லைவனத்திற்கு ரத்தினங்கள் பதித்த ரதத்தில் வந்திறங்கி அனைவருக்கும் ஆனந்த நடனக் காட்சி தந்தருளினார் என்று ஐதீக கதையைக் கூறுகிறார்கள்.

chidambaram nadarajar temple festival peoples

மேலும் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்கள் தாங்கள் கண்ட ஆனந்த நடன காட்சியை உலகம் உய்ய அனைவரும் தரிசிக்க நித்தமும் நடனக்காட்சி அருள வேண்டுமென வேண்ட அதன்படியே வரம் அளிக்கிறார் நடராஜர் என்று கூறப்படுகிறது. பின்னர் அனுதினமும் பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவத்தை புரிந்தருளுகின்றார். மேலும் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்கள் கௌடதேச மன்னன் சிம்மவர்மனுக்கு பெருநோய் தீர தில்லைத் தலத்தின் தீர்த்தமாகிய சிவகங்கையில் நீராடி மூர்த்தியாய் விளங்கும் ஸ்ரீ மூலநாதரை வழிபட்டால் நோய் தீரும் என்று அழைக்க அம்மன்னன் தினமும் சிவகங்கையில் நீராடி ஸ்ரீ மூலநாதரை வழிபட்டு வந்தமையால் பெரு நோய் நீங்கி பொன்நிறம் உடல் பெற்றமையால் ஹிரண்யவர்மன் என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். மேலும் அம்மன்னன் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்து ஸ்ரீ மூலநாதர் இருக்கு அழகிய கோயிலும் கட்டி அகமகிழ்ந்தார்.


வேண்டும் வரங்களை உடனடியாக வழங்கும் ஸ்ரீ உமயபார்வதி ஸமேத ஸ்ரீ மூலநாதரை சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சுயம்வரா காலபார்வதி ஜபம் செய்து மாலை சாற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிப்ரவரி 5- ஆம் தேதி காலை 10.00 மணியளவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதனை காண வெளி மாநிலங்களில் இருந்தும் உலக நாடுகளில் உள்ள சிவ பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அனைவரும் குழுக்கு விழாவை கண்டுகளித்தனர். 

chidambaram nadarajar temple festival peoples

நடராஜருக்கே மூலநாதர் என்பதால் 33- யாக குண்டங்கள் வைத்து கடந்த 1ம் தேதி முதல் ஏகம் செய்யப்பட்டது. கடந்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடராஜருக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கூட இவ்வளவு குண்டம் வைக்கவில்லை என்பத குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்