சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23 வயது) கனடா செல்வதற்காக நேற்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.
இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. அதில் தமிழக அரசையும், அரசியல் கட்சிகளை குறித்தும் சரமாரி கேள்விளை எழுப்பினார்கள். மேலும் உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பரங்கிமலை காவல்துறை ஆணையர் தாக்கல் செய்ய உத்தரவு. மேலும் இது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் வழக்கை செப்டம்பர் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.