Published on 01/07/2024 | Edited on 01/07/2024
மத மோதல்களைத் தூண்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி புகழேந்தி வழக்கு ஒன்றில் கருத்து தெரிவிக்கையில், “மத மோதல்களைத் தூண்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத மோதல்கள் தொடர்பாகப் புகார் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யக் காலதாமதம் ஏன் ஏற்படுகிறது. மத மோதல்களை உருவாக்கும் வகையில் பதிவிடுவோரை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.