Skip to main content

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
 Chance of rain in 12 districts

தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இன்று 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8 முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். ஜூன் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டி அல்லது சற்று அதிகமாக இருக்கக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்