Published on 22/12/2018 | Edited on 22/12/2018

பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாக தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. அந்த மனுவில்,
பாடல்களுக்கான ராயல்டியில் 50 சதவிகித பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கும் முறையாக வந்ததில்லை.ராயல்டி தொகையில் இருந்து தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பணம் சுமார் ரூபாய் 200 கோடிக்கு மேல் ஏமாற்றப்பட்டுள்ளது. இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த பல தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இளையராஜா பரிந்துரைப்படியே ஆடியோ உரிமையை எக்கோ கம்பெனிக்கு தயாரிப்பாளர்கள் தந்தனர் என கூறப்படுத்துள்ளது.