Skip to main content

பொறியியல் மறுகூட்டலில் மதிப்பெண்ணை வாரி இறைத்தார்களா? அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 10 பேர்மீது வழக்கு!

Published on 01/08/2018 | Edited on 01/08/2018

 

anna university

 

 

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர் உமா உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.


சென்னை  கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. பொறியியல் படிப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது அனைவரும் அறிந்த ஒன்றாகும் இந்த தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாமல் போகும் மாணவர்கள் ஆகியோர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பார்கள் அதற்கு தனியாக தொகையை செலுத்த வேண்டும் இந்த நிலையில் 2017 -ஆம் ஆண்டு ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் 1 லட்சத்து இரண்டாயிரத்து 380 பேர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர் இதில் 73 ஆயிரத்து 733 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் குறிப்பாக 16 ஆயிரத்து 636 பேர் அதிக மதிப்பெண் பெற்றனர். இதில் உமா விஜயகுமார் சிவகுமார் ஆகியோர் அதிக மதிப்பெண் வழங்க ஒவ்வொரு மாணவரிடமும் பத்தாயிரம் ரூபாய் வாங்கி இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான முதல் கட்ட தகவல் அறிக்கையில் முன்னாள் தேர்வுத்துறை  கட்டுப்பாட்டாளர் உமா உதவிப்பேராசிரியர் விஜயகுமார், சிவக்குமார்,சுந்தர்ராஜன் ,மகேஷ்பாபு, அன்புச்செல்வன், பிரதீபா ,பிரகதீஸ்வரர் ,ரமேஷ்கண்ணா, ரமேஷ் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் 120(B),167,201,420,468,471 மற்றும் 13(2) r/w  13(1)(d) லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988 படி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.



இதில் பலர் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பதவி வகித்து வருகின்றனர் இவர்களை விரைவில் லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்து விசாரணைக்கு எடுக்க இருக்கிறது அந்த விசாரணையில் இது மட்டுமில்லாமல் இன்னும் பல மோசடி புகார்கள் வெளி வர வாய்ப்பிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்ற

சார்ந்த செய்திகள்